குவைத்தில் வணிக (commercial) விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து விமான நிலைய உயர் குழு ஆலோசனை..!!

Airport higher committee discusses commercial flights resumption plan. (photo : IIK)

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை மீண்டும் இயக்குவதற்காக , உயர் குழு வியாழக்கிழமை (ஜூன் 11) அன்று பல வழிகள் மூலம் வணிக (Commercial) விமானப் பயணத்தை படிப்படியாக மீண்டும் தொடங்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியது.

இந்த குழு விமானங்களை மீண்டும் தொடங்குவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் திட்டங்களை எடுத்துக் கொள்ளும் என்று குவைத் சிவில் விமானப் போக்குவரத்து பொது நிர்வாகத் தலைவர் ஷேக் சல்மான் அல்-ஹமூத் அல்-சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஷேக் சல்மான், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (ICAO) மற்றும் பிற தொடர்புடைய சர்வதேச அமைப்புகளால் வெளியிடப்பட்ட சர்வதேச சட்டங்களின்படி திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

தரமான விதிகள், பரிந்துரைக்கப்பட்ட பணி முறைகள் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அமலாக்கத் திட்டத்தை மேற்பார்வையிடுவதற்கும் இந்த குழு பொறுப்பேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.