குவைத் சாலையில் கோரவிபத்து ஏற்பட்டது, இதில் ஒருவர் பலி மற்றும் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தின் ஜாபிர் அல் அலி பகுதியில் சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
இதில் வாகனங்கள் பயங்கரமான தீ பிடித்து எரிந்தது என்றும், இதில் ஒருவர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அவர் குவைத் குடிமகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 4 பேர் தீ காயங்களுடன் மீட்கப்பட்டனர், இவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த நான்கு பேரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலையில் ஏற்பட்டது என்று தீயணைப்பு துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.
?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/
? Twitter : https://www.twitter.com/kuwaittms