குவைத்திலிருந்து 1.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு..!!

About 1.5 million expatriates expected to leave Kuwait by the end of this year. (photo : IIK)

குவைத்திலிருந்து சுமார் 160,000 வெளிநாட்டவர்கள் மார்ச் 16 முதல் ஜூலை 08 வரை தங்கள் சொந்த நாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, குவைத் விமான நிலையம் அதன் திறனில் 15% மட்டுமே இயக்கிவருகிறது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் குவைத்திலிருந்து புறப்படுவார்கள் என்று எதிபார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக நிதி இழப்புகள் ஏற்பட்டதால் சில தனியார் துறை நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களின் சேவையை நிறுத்திவிட்டது, இதனால் வெளிநாட்டவர்கள் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

குவைத்திலிருந்து 116 நாட்களுக்குள், மார்ச் 16 முதல் ஜூலை 9 வரை, குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 998 விமானங்களில் 158,031 பயணிகள் புறப்பட்டுள்ளனர், இதில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08