குவைத் நாட்டில் பொதுமன்னிப்பு பட்டியலில் 900 கைதிகள்..!

900 prisoners in Kuwait ameer amnesty list.

குவைத் நாட்டில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் தேசிய தினம் மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள கைதிகளுக்கு நன்நடத்தை அடிப்படையில் குவைத் மன்னர் அவர்களின் உத்தரவின்படி, தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை வழங்குவது வழக்கம் ஆகும்.

அதேபோல், இந்த வருடம் குவைத் சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னிட்டு, 900 திற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கைதிகள் விடுதலை செய்யவும், மேலும் பலரது தண்டனை குறைப்பு செய்யவும் வாய்ப்புள்ளது என்ற புதிய தகவலை குவைத்தின் தினசரி நாளிதழ் அல்-கபாஸ் செய்திக் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வருடம் பொது
மன்னிப்பில் 706 பேர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர் என்றும் பலரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வருட ஜனவரி மாத இறுதியில் குவைத் மன்னரிடம் இந்த பட்டியல் பரிந்துரைக்கப்படும் என்றும், மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.