கடுமையான கோடைகாலத்தில் குடிநீரை வழங்குவதற்காக குவைத் முழுவதும் நீர் குளிரூட்டிகள் நிறுவப்பட்டுள்ளது..!!

800 water coolers installed across Kuwait to provide drinking water in scorching summer. (image credit : IIK)

குவைத்தின் Al-Othman Zakat கமிட்டியின் சார்பாக நாட்டிற்குள் 800க்கும் மேற்பட்ட நீர் குளிரூட்டிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான கோடை வெப்பத்தின் போது குளிர்ந்த குடிநீரை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு உதவ முடியும் குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் சர்வதேச விமான நிலையம் அருகே தீ விபத்து..!!

Al-Othman Zakat கமிட்டியின் பொது மேலாளர் திரு. Ahmad Baqer Al-Kandari அவர்கள் கூறுகையில், இந்த திட்டத்தை ஆதரிக்க அனைத்து நல்ல மனிதர்களையும் குழு வரவேற்கிறது என்றார்.

குறிப்பாக இந்த குளிர்சாதன பெட்டிகளுக்கு தொடர்ச்சியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்த ஆண்டுதோறும் பராமரிப்பு, துப்புரவு மற்றும் தொழில்நுட்ப சேவைகள் தேவைப்படுவதால் தங்களது உதவியை வழங்குமாறு கேட்டுக்கொணடார்.

மேலும், புதிய நீர் குளிரூட்டியின் விலை, நிறுவல் மற்றும் இணைப்புகள் உட்பட சுமார் 350 தினார் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms