குவைத் வரலாற்றில் முதன்முறையாக 8 பெண்கள் நீதிபதிகளாக பதிவியேற்பு..!!

8 women sworn in as judges in Kuwait in historic first
8 women sworn in as judges in Kuwait in historic first. (Photo : Kuwait Times)

குவைத் வரலாற்றில் முதன் முறையாக எட்டு பெண்கள் குவைத்தின் நீதிபதிகளாக பதிவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு பெண்கள் குவைத்தின் உச்சநீதிமன்ற கவுன்சில் மற்றும் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவர் யூசெப் அல்-முட்டாவா ஆகியோருக்கு முன்பாக சட்டப்பூர்வமாக குவைத்தின் நீதிபதிகளாக பதவியேற்றனர், குவைத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற முதல் பெண்கள் இவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டாவா அவர்கள் நேற்று (செப்டம்பர் 4) பதவியேற்ற 54 நீதிபதிகளுக்கு தாங்கள் சுமக்கும் பொறுப்பு மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து அவர் விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

மேலும், நீதி மற்றும் வழக்குரைஞர்களின் நலன்களுக்காக பாடுபடுமாறு அவர்களை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம், எட்டு பெண் வழக்குரைஞர்களை நீதிபதி பதவிக்கு உயர்த்த அட்டர்னி ஜெனரல் டிரார் அல்-ஆசூசி அவர்கள் ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

பெண் நீதிபதிகளின் அனுபவத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மதிப்பீடு தேவைப்படுகிறது, இந்த பரிசோதனையை வெற்றிகரமாக மாற்றுவதில் புதிய பெண் நீதிபதிகளின் பங்கை வலியுறுத்துகிறது, நீதிபதிகளின் நல்ல செயல்திறனுக்கு வழிவகுக்கும் அனைத்து உத்தரவுகளையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை முட்டாவா அவர்கள் வலியுறுத்தினார்.

எட்டு பெண் நீதிபதிகள்: பாத்திமா அல்-சாகீர், பாத்திமா அல்-காந்தாரி, சனபெல் அல்-ஹூதி, பாத்திமா அல்-ஃபர்ஹான், பஷைர் ஷா, பஷீர் அல்-ரக்தான், ராவத் அல்-தப்தாபே, மற்றும் லுல்வா அல்-கானிம்.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms