குவைத்தில் மேலும் 7 மருந்தகங்கள் மூடல்..!!

7 More Pharmacies Shut in kuwait. (photo : Arab Times)

தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் அதன் விலை கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் இரண்டாவது நாளில் 7 மருந்தகங்களை மூடியது.

அமைச்சர் கலீத் அல்-ரவுதன் மற்றும் துணை செயலாளர் டாக்டர் அப்துல்லா அல்-அஃபாசி தலைமையிலான குழு, விற்பனை நிலையங்கள் அமைச்சகத்தினால் குறிப்பிடப்பட்ட விலைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

அமைச்சகத்தின் குறிப்பிடப்பட்ட விலைகளுக்கு விற்காததற்காக இந்த குழு விமான நிலைய முனையத்தில் உள்ள வணிக நிலையங்களில் ஒன்றை மூடியது.

photo : Arab Times

அமைச்சர் அல்-ரவுதன் அவர்கள் குவைத்தில் உள்ள அனைத்து சந்தைகளையும் விற்பனை நிலையங்களையும் கண்காணிப்பதாகவும். மேலும், மீறுவோர் மீது நாங்கள் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்போம் மற்றும் அவர்களின் மருந்தகங்கள் மூடப்படும் என்று எச்சரித்தார்.

photo : Arab Times

குவைத் தற்போது சுகாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், கடவுள் விருப்பத்துடனும் மற்றும் அனைவரின் ஒத்துழைப்புடன் அதை சமாளிப்போம் என்று அல்-ரவுதன் அவர்கள் தெரிவித்தார்.

source : Arab Times