குவைத்தில் கடந்த 72 மணி நேரத்திற்குள் 5வது தற்கொலை – சல்வாவில் இந்தியப் பணிப்பெண் தற்கொலை..!!

5th Suicide within 72 hrs - Indian maid commits suicide in Salwa. (photo : Arab Times)

குவைத்தில் வெளிநாட்டு சமூகத்தினரிடையே தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றன, கடந்த 72 மணி நேரத்திற்குள் 5 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நேபாளர்களும் மூன்று இந்தியர்களும் கடந்த இரண்டு நாட்களில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது சல்வா பகுதியில் இந்தியாவை சேர்ந்த பெண் தனது ஆதரவாளரின் (sponsor) வீட்டில் ஒரு பெட்ஷீட்டைப் பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரத்தின்படி, உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் சல்வா பகுதியில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது, உடனடியாக பாதுகாப்பு ரோந்து மற்றும் ஆம்புலன்ஸ்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது இந்தியாவை சேர்ந்த பெண் வீட்டு வேலை செய்பவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டறிந்தனர்.

பாதிக்கப்பட்ட பெணின் ஆதரவாளர் கூறுகையில், அந்த பெண் எதிலும் பாதிக்கப்படவில்லை என்றும் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், மேலும் அவர் தனது நாட்டிலிருந்து ஏதோ செய்தி கிடைத்தது அது அவரை தற்கொலைக்கு தூண்டியது என்றும் அந்த வட்டாரம் கூறியுள்ளது.

அந்த பெணின் உடல் அகற்றப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது மற்றும் சம்பவம் குறித்து விசாரணை தொடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.