குவைத்தில் கொரோனா வைரஸால் 7 பேர் மரணம்; புதிதாக 598 பேர் பாதிப்பு.!

குவைத்தில் கடந்த 24 மணி (11.05.2020) நேரத்தில் மேலும் 598 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 9,286ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை 2,907 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 6,314 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், 65 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.