குவைத் தேசிய தினங்களை முன்னிட்டு ஐந்து நாட்கள் விடுமுறை…

5-days holiday for Kuwait National Days this year.

குவைத் நாட்டின் சுதந்திர தினம் மற்றும் விடுதலை தினத்தின் விடுமுறைகள் பிப்ரவரி 25-ஆம் தேதி செவ்வாய்கிழமை மற்றும் பிப்ரவரி 26-ஆம் தேதி புதன்கிழமை ஆகிய நாட்களில் வருகின்றது.

பிப்ரவரி 27-ஆம் தேதி வியாழகிழமை அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது பொது விடுமுறை மற்றும் வார இறுதிக்கு இடையில் வருகிறது, இது பொது விடுமுறைகள் தொடர்பாக ஜூலை 22, 1979 அன்று வெளியிடப்பட்ட அமைச்சரவை முடிவு எண் 4/1979 மற்றும் முடிவு எண் 252 மூலம் திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில பொது விடுமுறைகள் மாற்றப்படுவது குறித்து தகவலறிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி அல்-அன்பா செய்தி தெரிவித்துள்ளது

இந்த இரண்டு முடிவின் அடிப்படையில், தேசிய நாட்களின் விடுமுறைகள் பிப்ரவரி 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி சனிக்கிழமை வரை இருக்கும் என்றும், அமைச்சரவையில் இருந்து புதிய முடிவின் தேவை இல்லாமலே மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து அதிகாரப்பூர்வமாக பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.