குவைத் கைஃபான் (Kaifan) கூட்டுறவு சங்கத்தில் 40 பேருக்கு COVID-19 தொற்று உறுதி..!!

40 infected in kaifan Cooperative in kuwait. (photo : Arab Times)

கைஃபான் (Kaifan) கூட்டுறவு சங்கம் ஞாயிற்றுக்கிழமை (மே 17) அன்று மாலை எடுக்கப்பட்ட 250 ரத்த மாதிரிகளில் 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

மேலும், ஊழியர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு மீது கடந்த வெள்ளிக்கிழமை அன்று சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையெடுத்து, மத்திய சந்தையை மூட இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளதாக, சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.