கொரோனா வைரஸ்; 23 சமூக ஊடக பக்கங்களுக்கு பொது வழக்கு விசாரணை..!!

23 social media accounts to face legal action in kuwait.

குவைத்தில் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை பீதியடையச் செய்த 23 சமூக ஊடக பக்கங்களை பொது வழக்கு விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்துறை அமைச்சர் முகமது அக்ஜாப்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

குவைத் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அக்ஜாப்ரி அவர்கள், பொது மக்களை பீதி மற்றும் பதற்றமடைய செய்த சமூக ஊடக பக்கங்களை கடுமையாக எச்சரித்தார்.

அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள் இருக்கவும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அக்ஜாப்ரி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக திங்களன்று தகவல்துறை அமைச்சர் 14 வலைத்தளங்களின் நிர்வாகிகளை இ-மீடியா சட்டத்தை மீறியதற்காக பொது வழக்குக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Arab Times