குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் 17 பேர் பாதிப்பு..!!

17 new cases detected in kuwait in last 24hrs. (photo : Arab times)

குவைத்தில் கொரோனா வைரஸால் (COVID-19) மேலும் 17 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மொத்தமாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 176ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநில அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள எச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை MOH வலியுறுத்தியுள்ளது.

மேலும், தேவைகளைத் தவிர்த்து வெளியேறுவதைத் தவிர்க்குமாறு MOH மக்களை கேட்டுக்கொண்டது.