குவைத்தில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

11 new infection cases detected in kuwait. (photo : Arab Times)

சுகாதார அமைச்சகம் செய்தியாளர் கூட்டத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123ஆக உயர்ந்துள்ளது.

இதில் 4 பேர் குவைத் நாட்டவர்கள் இங்கிலாந்திற்கு பயணம் செய்தவர்கள், இங்கிலாந்திலிருந்து வந்த வைரஸால் உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட 3 குவைத் மக்கள், அமெரிக்கா சென்று வந்த 1 குவைத் நபர், ஈரானுக்கு பயணம் செய்துவந்த குவைத்தை சேர்ந்த ஒருவர், 1 வழக்கு கத்தார் சென்று வந்தவர் மற்றும் ஒரு எகிப்திய வெளிநாட்டவர் எகிப்துக்கு பயணம் செய்து வந்தவர் ஆக 11 வழக்குகள் கடந்த 24 மணி நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

source : Arab Times